ஜோர்டான் அரசு தனி மனித நலனுக்காக செயல்படுகிறது என அந்நாட்டின் இளவரசர் குற்றம் சாட்சியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் ஜோர்டான் அரசு அந்நாட்டு இளவரசரை வீட்டில் சிறைப்படுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஜோர்டான் மன்னரை விமர்சித்துப் பேசிய குற்றத்திற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியுள்ளன. இதுகுறித்து உள்ளூர் ஊடகத்திற்கு இளவரசர் ஹம்ஸா வீடியோ அறிக்கை ஒன்றை அனுபியுள்ளார். அதில் இராணுவ தலைமை அதிகாரி தன் வீட்டிற்கு வந்தார் என்றும் எனக்கு வெளியே செல்வதற்கும், பிறரிடம் தொடர்பு கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார் என்றும் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹம்ஸா தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜோர்டான் அரசு தனிமனித நலனுக்காக செயல்படுகிறது என்றும் ஊழல் மிகுந்த செயல்களை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதனிடையே கடந்த 2004ஆம் ஆண்டு பட்டத்து இளவரசர் ஹம்ஸாவிடமிருந்து பட்டம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.