Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜோலார்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்”…. மாவட்ட ஆட்சியர் தலைமை…!!!!!

ஜோலார்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தின் போது ஆட்சியர் பேசியுள்ளதாவது, வருடத்தில் நான்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணையிடப்பட்டிருக்கின்றது. கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், வாக்காளர் பங்கேற்று பஞ்சாயத்துகளில் உள்ள குறைகளை விவாதித்து தீர்வு காண வேண்டும்.

பஞ்சாயத்துகளில் முக்கிய பணியாக கருதப்படுவது சாலை, வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, கடன் உதவி உள்ளிட்டவை ஆகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக்காலங்களில் வீடுகளில் நீர் போகாதவாறு பாதுகாக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் திட்டங்கள் குறித்தும் நடைபெறுகின்ற பணிகள் குறித்தும் முடிவுற்ற பணிகள் குறித்தும் பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.

Categories

Tech |