ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது.
இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான தேவராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பலர் கலந்துகொண்டார்கள்.
நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். பின் பொது மக்களுக்கும் போலீஸாருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் போலீசார் பலரும் கலந்து கொண்டார்கள். நாட்டறம்பள்ளி அடுத்துள்ள அக்ரகாரம் உயர்நிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடைபாண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா 2 கிராம் தங்க நாணயத்தை பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார்.