வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15ஆம் தேதி சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகின்றது. பல கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் திருடியதாக கூறப்படுகிறது. லாக்கரை உடைக்க முடியாததால் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்கம், வைரம் நகைகள் திருடபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.