ஜோபைடனின் ஆசிய பயணத்துக்கு முன்பாக வட கொரியா அணுஆயுத சோதனையினை நடத்தலாமென்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஐநா விதித்த பல்வேறு தடைகளை மீறி தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜோபைடனின் ஆசிய வருகையையொட்டி வடகொரியா அணுஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை தன் முதல் ஆசிய பயணத்தை மேற்கொள்ள இருகிறார்.
அவர் அமெரிக்க நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் நடத்திய உச்சிமாநாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிலையில் பயணத்தின்போது வட கொரியா, அணுஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனைகள் (அல்லது) அணுஆயுத சோதனை மேற்கொள்ளலாம் என உளவுத்துறை தெரிவிப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.