Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் ஒரு உத்தரவு…. பசியை மறக்க போகும் 24 மில்லியன் மக்கள்…. ஐக்கிய நாடுகள் பாராட்டு…!!

ஒரே உத்தரவில் 24 மில்லியன் மக்களுக்கு உதவும் நடவடிக்கையை ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ளது

அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அந்நிய  பயங்கரவாத குழுக்களின் பட்டியலிலிருந்து ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி இயக்கத்தை நீக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது . வெள்ளிக்கிழமை காங்கிரசிடம் ஜோ பைடன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஹவுதி  இயக்கத்தை அமெரிக்காவின் அந்நிய பயங்கரவாத குழுக்களின்  பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிடொனல்டு டிரம்பின் நிர்வாகம் ஜனவரி நடுப்பகுதியில் ஏமன் நாட்டில் ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுதி இயக்கத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக நியமிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடன் அரசாணையை மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை ஐக்கிய நாடுகள் அவை வரவேற்றுள்ளது.

ஏனென்றால் இதுவரை சுமார் 2,33,000 பேர் அப்பகுதியில் நடக்கும் யுத்தத்தினால் நீர், உணவு, மருந்து போன்ற உயிர் வாழத்தேவையான அடிப்படை உதவிகள் கூட இல்லாமல் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி இயக்கம் பயங்கரவாத குழு என்று அறிவிக்கப்பட்டதால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையோ  அல்லது ஒப்பந்தமோ  செய்ய இயலாது. இதனால் எந்த அமைப்பும் அந்நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்வதில்  சிரமம் ஏற்பட்டது. இப்போது சுமார் 24 மில்லியன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை கொண்டு சேர்க்க ஜோ பைடன் நிர்வாகம் அனுமதித்துள்ளது.

Categories

Tech |