அமெரிக்காவின் புதிய திட்டத்தால் சீன நிறுவனங்களுக்கு ஜோ பைடன் ஆட்சியிலும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை மற்றும் கட்டுப்பாடுகள் ஜோ பைடன் ஆட்சியிலும் தொடரும் என்று பல தரப்பு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த மசோதாவிற்கு தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு முக்கிய தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் ஒப்புதல் அளித்து கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் மூலம் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீட்டை ஈட்ட பல சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்தோ அல்லது வெளியீட்டு வழியாகவோ முதலீடு திரட்ட வேண்டும்.
அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே பிசிஏஓபி அமைப்புடன் இணைந்து பணியாற்ற துவங்கியுள்ள நிலையில், சீன நிறுவனம் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்காவில் சீன நிறுவனங்கள் தங்கள் பணியை முறையாக செய்வதில்லை. பல பில்லியன் மில்லியன் டாலர்களை மோசடி செய்வதாக அமெரிக்கத் தரப்பு கூறுகிறது. இதன்காரணமாக சீன நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என்று அமெரிக்க நிர்வாகம் தெரிவித்து வருகிறது. பொதுவாக சீன நிறுவனங்கள் அமெரிக்க கட்டுப்பாட்டு ஆணையத்திணை தங்களது நிர்வாகதிற்குள் நுழைய விடாது. இதனால் தற்போது அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள மசோதா சீன நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக அமையும்.