பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது கார்ன் வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன் பிரிட்டனின் ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி, மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டோர் இந்த விருதினை ஒன்றிணைந்து சிறப்பிக்க உள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப் பிரிட்டனின் வருகையை முன்னிட்டு அவரை ராணியார் மட்டுமே வரவேற்று உபசரித்தார். இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். கொரோனா பரவலை தொடங்கிய ஆரம்ப கட்ட நாள் முதல் ராணியார், பக்கிங்ஹாம் அரண்மனையில் தங்குவதை தவிர்த்து வந்தார். ஜூன் மாதம் முதல் உத்தியோகபூர்வமான பணிகளை துவங்க உள்ளார்.
1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டனின் ராணியார் இரண்டாம் எலிசபெத், அமெரிக்காவின் அனைத்து ஜனாதிபதிகளின் சந்தித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் இளவரசர் சார்லஸ் நன்றி தெரிவிக்கும் விதத்தில் கடிதம் எழுதியுள்ளார். ராணி யாரும் தனிப்பட்ட முறையில் ஜோ பைடன் வாழ்த்து தகவல்களை அனுப்பியுள்ளார்.