Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் அமைத்த சிறப்புக் குழு…. இடம்பிடித்து கலக்கிய தமிழ்நாட்டுப் பெண் …!!

அமெரிக்கா ஜனாதிபதி நியமித்துள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன், அங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் 3 பேர் தலைமை பொறுப்பில் உள்ள இதில்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம் பெற்றுள்ளார். இவரையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செலின் ராஜ் கவுண்டர்(35) என்ற பெண் மருத்துவர் இதில் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உதவிப் பேராசிரியராக கிராஸ் மேன்  மருத்துவக்கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

மேலும் இவர் அமெரிக்க நாட்டில் உள்ள காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1998 – 2012 காலகட்டத்தில் பல நாடுகளை பாதித்த காசநோய் மற்றும் ஹெச்ஐவி தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள மலைவாழ் மக்களைப் பாதித்து வந்த நோய்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார். இவரின் தந்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் அமெரிக்கப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அமெரிக்காவிலேயே வசித்து வந்துள்ளார். அவருக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்தவர் தான் செலின் ராஜ் கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |