அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜோ பைடனுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நான் காத்திருக்கிறேன். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் கூறியுள்ளார்.