அமெரிக்க தேர்தலில் வெற்றியை நெருங்கும் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிபர் டிரம்ப் ட்விட்டரில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில், பைடன் 290 இடங்களையும், ட்ரம்ப் 214 இடங்களையும், கைப்பற்றியுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது டிரம்பெட் முன்னிலையில் இருந்தார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைய இருக்கும் சூழலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவித்துக்கொண்டார்.
பின்பு அஞ்சல் வாக்குகள் எண்ண தொடங்கியதும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி விட்டார்.
இதனை அடுத்து, ட்ரம்ப் தனது ட்விட்டரில் “தவறாக ஜோ பைடன் அதிபர் பதவியை கோரக்கூடாது. என்னாலும் அவ்வாறு கோர முடியும். சட்ட நடவடிக்கைகள் இப்போது தொடங்குகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
முன்பே தேர்தலை எதிர்த்து நீதிமன்றம் செல்வதாக டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் அதிபர் தேர்தலில் பைடன் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.