அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இரு நாட்டு தொடர்பு குறித்து தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர்.
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன்க்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் இரு நாட்டு அதிபர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டு தொலைபேசி மூலமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பாக அமெரிக்க அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், எங்களுக்கும், எங்களது நட்பு நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் ரஷ்யா செயல்பட்டு வருகிறது. அதற்கு உரிய பதில் அளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நற்பணிகளை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, ரஷ்யா மீது பிறநாடுகள் இணைய வழித் தாக்குதல் செய்வது குறித்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு எதிராக ரஷ்யா செயல்படுத்துவது குறித்தும்,ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்தும் பேசப்பட்டுள்ளது என்று அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ள எந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிடவில்லை. ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உறவுகளை இயல்பாக்குவது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு குறித்து இரு நாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர் என்று ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உரையாடலில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் அதிபர்கள் வெளிப்படையாக பேசி இருக்கின்றனர் என்று ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அமெரிக்கா ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர், கப்பல் மற்றும் ஏவுகணைகளின் அளவை கட்டுப்படுத்தும் ஒபாமா கால ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் ட்ரம் மறுப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.