இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொட்டேரோ நடைபெற்று பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. இன்று (பிப். 25) இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் ஷர்மா 57, ரஹானே 1 ரன்களுடன் களத்தில் இன்றைய ஆட்டத்தை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரஹானே ஆட்டமிழக்க அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட் சீட்டுக்கட்டாய் சரிந்தது. ரோஹித் சர்மா அதிகபட்சமாக 66 ரன்னும், கோலி 27ரன்னும் எடுத்தனர். இந்திய அணி கடைசி 7 விக்கெட்டை 31ரன்களில் விட்டுக்கொடுக்க, 145ரன்னில் ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் வெறும் 6.2 ஓவர்களை வீசி 8ரன்கள் விட்டுக்கொடுத்து 5விக்கெட் வீழ்த்தி ரூட் அசத்தினார். ஜாக் லீச் 4விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணி 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆம் இன்னிங்க்ஸை தொடங்க இருக்கின்றது.