தொடர் கனமழை காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில்களில் வார இறுதிநாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால் இன்று புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி மார்க்கம் விரைவில் முழுவதுமாக பராமரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.