தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதித்தும், பல முக்கிய இடங்களில் அங்காடிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து ஞாயிறுகளில் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது .சென்னையில் கடந்த 27ஆம் தேதி 139 ஆக இருந்த பாதிப்பு 194 ஆக அதிகரித்துள்ளதால் அதிகம் உள்ள மண்டலங்களில் ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளை அடைக்க அறிவிப்பு வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.