Categories
மாநில செய்திகள்

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு ஊரடங்கு…? – வெளியான தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் முழுமுடக்கம் அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. புதிய கட்டுப்பாடுகள் குறித்த விரிவான அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |