Categories
மாநில செய்திகள்

ஞாயிறு முழு ஊரடங்கில் தளர்வு…. திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை – அரக்கோணம், சென்னை- கும்மிடிப்பூண்டி, சென்னை- வேளச்சேரி, சென்னை -செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில்கள் இயக்கப்படும். மேலும் கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |