தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.