லெபனான் நாட்டில் டன் கணக்கில் மீன்கள் செத்து ஒரே நேரத்தில் கரை ஒதுங்குவதால் அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லெபனான் நாட்டில் கிராயன் என்ற நகர் பகுதியில் உள்ள லிடனி என்ற ஏரியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால் தற்போது அந்த ஏரியில் உள்ள நீர் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று தினங்களில் மட்டும் 40 டன் மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அங்கு உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு லெபனான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது ஆகும்.