Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“டபுள் மீனிங் பேச்சு”- சபல பேராசிரியர்…. மாணவர்கள் வைத்த “ஆப்பு”….!!!

கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். அவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்தும் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்த ஆதாரங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |