ஜெனிலியா, தான் உணவு சமைத்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டதை பார்த்த பலரும் சிரித்தவாறு கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகு இந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜெனிலியா அவ்வப்போது கணவருடன் காமெடி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது ஜெனிலியா வொர்க் அவுட் செய்து வாழப் போகின்றேன் என களமிறங்கியுள்ளார்.
https://www.instagram.com/reel/CfTRycRpyMt/?utm_source=ig_embed&ig_rid=f30f917d-8e13-4ef0-85f0-fedc38294924
பிட்னஸில் களமிறங்கியதிலிருந்து அதற்கான வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்ற நிலையில் ஒர்க்கவுட் செய்தால் மட்டும் போதாது என்று உணவு கட்டுப்பாட்டிலும் களமிறங்கியுள்ளார். இன்ஸ்டாவில் அவரே உணவு சமைத்து சாப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதை பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, அடேங்கப்பா இவ்வளவு அதிகமாக சாப்பிடக்கூடாது. இப்படி ஜாஸ்தியாக சாப்பிடுவதால் தான் நீங்கள் குண்டாக இருக்கின்றீர்கள். புழுவை தான் வேகவைத்து சாப்பிடுகிறார்களோ என நினைத்து விட்டோம். இப்படி ஒரு டயட்டை பார்த்ததே இல்லை. நீங்க வேற லெவல் என கிண்டலடிக்கும் வகையில் கூறியுள்ளனர்.