உத்திரபிரதேசத்தில் விமான படை தளத்திற்கு எடுத்து செல்லப்பட்ட போர் விமானத்தின் டயர்கள் திருடப்பட்டுள்ளன.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்ஷிகாதலா பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இந்த படை தளத்தில் இருந்து கடந்த 27ம் தேதி ராஜஸ்தானில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்வதற்காக சில உபகரணங்கள் லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவ்வாறு செல்லும்போது லக்னோவில் உள்ள ஐஸ்யானா பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது அந்த லாரியில் ஏறிய மர்ம நபர்கள் சிலர் மீரஜ் ரக போர் விமானங்களின் டயர்களை திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.