Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

டயர் வெடித்ததால் கவிழ்ந்த லாரி…. காயமடைந்த 4 தொழிலாளர்கள்…. கோர விபத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எ.ஆவாரம்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தென்னந் தோப்புகளில் தென்னை மட்டைகளை மொத்தமாக வாங்கி லாரி மூலம் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். மேலும் தென்னை மட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு காசி விஸ்வநாதன் பாண்டியராஜபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் லட்சுமி, செல்வி, ரமேஷ், மணி ஆகிய நான்கு தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் விளாம்பட்டி-மட்டப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காசிவிஸ்வநாதன் காயமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த 4 தொழிலாளர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |