20 வருடங்களுக்கு மேலாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்ற தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடித்தளமான ஆஹா தமிழ் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றார்கள். இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்கடல் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள கைதிகள் சிறுத்தையை தழுவி உருவாக்கப்படுகிறது. இயக்குனர் ரபிக் இஸ்மாயில் இந்த படத்தை இயக்குகின்றார். சிறந்த இலக்கிய படைப்புகளை வெற்றிகரமாக திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் ஜெயமோகனின் மூலக்கதைக்கு ஈடு கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பு நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Categories