Categories
தேசிய செய்திகள்

டவ்தே புயல் எச்சரிக்கை: தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்…. குஜராத் அரசு அறிவிப்பு…!!!

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும், இது டவ்-தே புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டவ்தே புயலாக நேற்று உருவாகியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.

இதையடுத்து டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது டவ்தே புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் டவ்தே புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத்தில் வரும் 17, 18ம் தேதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

Categories

Tech |