Categories
மாநில செய்திகள்

டாக்சி, ஆட்டோ கட்டணம் எவ்வளவு தெரியுமா?….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு‌, பென்சன் திட்டம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய 2 தினங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டது.

இதன்காரணமாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்த மக்கள் ரயில்வே நிலையங்கள் பேருந்து நிலையங்களில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். அதாவது பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த போராட்டத்தினால் ஆட்டோ மற்றும் கால்டாக்சிகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுநர்கள் வழக்கத்தை விட 100 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் சென்னையில் மெட்ரோ மற்றும் மின்சாரரயில் சேவைகள் வழக்கம்போல் இயங்குவதால் ரயில்வே நிலையங்களில் அதிக அளவு மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

Categories

Tech |