Categories
மாநில செய்திகள்

“டாக்டரானார் 73 வயது முதியவர்…. படிச்ச சப்ஜெக்ட் தா வேற லெவல்”…. குவியும் பாராட்டு….!!!

நெல்லையை சேர்ந்த 73 வயது முதியவர் பிஎச்டி படித்து பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தங்கப்பன் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தனது இளமைப் பருவத்தில் எம்ஏ வரலாறு மற்றும் பிஎட் படிப்புகளை முடித்தவர். உயர்கல்வி மீதும் காந்தியக் கொள்கை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படிப்பை தொடர்ந்தார். “இன்றைய பயங்கரவாத உலகத்திற்கு காந்தியை தத்துவம் எவ்வாறு பொருத்தமாகும்” என்ற தலைப்பில் எட்டு ஆண்டுகளாக தனது ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கடந்த 2018ஆம் ஆண்டு அந்த ஆய்வினை முடித்தார்.

இருப்பினும் ஊரடங்கு காரணமாக அவருக்கு பிஎச்டி பட்டம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மனோன்மணியம் பல்கலை கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் தங்கப்பன் தனது பிஎச்டி பட்டத்தை பெற்றுக்கொண்டார்.  70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பட்டம் பெறுவது வழக்கமான விஷயம் என்றாலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப பயங்கரவாதம் குறித்தும், அதில் காந்தி தத்துவத்தின் பயன்பாடு குறித்த தலைப்பில் முதியவர் தங்கப்பன் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |