Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி” எப்படி தெரியுமா….?? போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இருவர் கைது….!!

பணமோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்பட இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு செல்வகுமார்(62) என்பவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, போரூரில் இருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் நான் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற பிறகு அங்கு டாக்டராக வேலை பார்த்து வருகிறேன். எனது நண்பர்கள் மூலமாக சேலத்தை சேர்ந்த சசிகுமார்(42) என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறினார். இந்நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடலாம் என ஆசை வார்த்தைகள் கூறி அதனை தானே பெற்று தருவதாக சசிகுமார் என்னிடம் கூறினார்.

இதனை நம்பி மூன்று தவணையாக சசிகுமாரிடம் 70 லட்ச ரூபாய் வரை கொடுத்தேன். ஆனாலும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவியை அவர் வாங்கி தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமல் என்னை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வகுமார் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் வழக்கறிஞர் என்பதும், ஐ.ஏ.எஸ்அதிகாரி போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்டதும் உறுதியானது. இந்த வழக்கில் தொடர்புடைய நடராஜன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |