Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு… காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்… மாலை அணிவித்து மரியாதை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கையில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேர்வாணையர் கண்ணபிரான், பல்கலைக்கழக பதிவாளர் வசீகரன், கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் பழனிச்சாமி, மகளிரியல் துறைத்தலைவர் மணிமேகலை, கல்லூரி வளர்ச்சி குழும முதன்மையர் சிவகுமார், நிர்வாக பணியாளர்கள், வரலாற்றுத்துறை தலைவர் சரவணகுமார் மற்றும் ஆசிரியர்கள், கல்வியியல் கல்லூரி முதல்வர் பாலு, நிதி அலுவலர் பாண்டியன், மேலாண்மை புல முதன்மையர் செந்தில் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Categories

Tech |