Categories
தேசிய செய்திகள்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு…!!!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது என்பது,  முன்னாள்  குடியரசு தலைவர் பாத்துக்கலாம் நினைவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட விருதாகும். இவ்விருது அமைக்கப்பட்ட செய்தியினை அப்போதைய தமிழக முதலமைச்சர்  ஜெ.ஜெயலலிதா ஜூலை 31, 2015 அன்று வெளியிட்டார். அத்துடன் அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15 ஆம் திகதியானது, தமிழ் நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக (Youth Awakening Day) கடைப்பிடிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்தார்.

இவ்விருதாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் (8 கிராம்) வழங்கப்படும். இந்நிலையில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதுக்கு awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்; உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |