Categories
சினிமா தமிழ் சினிமா

‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .

Sivakarthikeyan's 'Doctor' to be released in theatres?

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர் படத்தை வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |