டாக்டர் பட்டம் பெறாமலேய கடந்த 5 வருடங்களாக பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பூண்டி கிராமம் தபால் நிலைய தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். 49 வயதான அவர் அப்பகுதியிலேயே 10 வருடங்களுக்கு மேலாக மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர் பி.எஸ்.சி வேதியல் பட்டதாரி, இ.சி.ஜி பயிற்சியும் முடித்துள்ளார். சீனிவாசன் முறையான டாக்டர் பட்டம் பெறாமல் கடந்த 5 வருடங்களாக பொதுமக்களுக்கு அவர் மருந்து கடையில் வைத்து அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் புல்லரம்பாக்கம் காவல்துறையில் புகார் செய்தனர் .அதைத்தொடர்ந்து நேற்று போலி டாக்டரான சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.