கேரளாவைச் சேர்ந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தில் சர்வதேச பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கேரளா மாநிலம் அட்டப்பாடி முக்காலி ஆதிவாசி கிராமத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பாரம்பரிய மருத்துவ படிப்பை கேரளாவில் உள்ள கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து 2017இல் இலங்கையில் பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி படிப்புக்கான Phd பட்டம் பெற்றார்.
2018இல் தமிழ்நாடு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற்றார். தற்போது அவர் கோவை தமிழக – கேரள எல்லைப் பகுதியான ஆணைக்கட்டியில் பொன்னியம்மாள் குருகுலம் என்கிற பெயரில் ஆதிவாசி பாரம்பரிய மூலிகை மருத்துவம் மையத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் புற்றுநோய்க்கான பாரம்பரிய மூலிகை சிகிச்சைக்காக இவருக்கு ஜெர்மனி நாட்டில் உலக அமைதி பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் ஆஃப் ஹெல்த் கேர் என்கிற பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.கொரோனா காலத்திலும் இணையதளம் வாயிலாக தன்னை அணுகுவோருக்கு சிகிச்சையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.