Categories
தேசிய செய்திகள்

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு…. ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!!

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் தலைமை வளாகம் மும்பையில் உள்ளது. இது துல்ஜாபூர், குவாஹாத்தி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் வளாகங்களை கொண்டுள்ளது. மும்பை வளாகத்தில் சமூகப் பணியில் மட்டும் 9 பாடப்பிரிவுகள் உள்ளன.

டிகிரி முடித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் இறுதி ஆண்டு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  TISS தேசிய நுழைவுத் தேர்வு மற்றும் TISS ஆன்லைன் மதிப்பீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. கூடுதல் தகவலுக்கு: admissions.tiss.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |