Categories
தேசிய செய்திகள்

டாட்டூ குத்த வந்த பெண்களிடம்…. பிரபல டாட்டூ கலைஞர் மீது…. அடுத்தடுத்து குவியும் புகார்கள்…!!!

டாட்டூ குத்த வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக டாட்டூ  கலைஞர் மீது புகார்கள் எழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒருவர்  பிரபல டாட்டூ  கலைஞர். இவர் பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பார்லரில்  நடிகைகள், மாடல் அழகிகள் வரை பலரும் குத்திக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில் டாட்டூ குத்த வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த பெண் முதலில் குத்தும் போது அந்த நபர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பெண்ணின் இந்த பதிவு வைரலானது அடுத்து டாட்டூ  கலைஞரால் பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து பெண்கள் பலர் டாட்டூ கலைஞர்  மீது புகார் கூறி வருவது கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் சமீபகாலமாக டாட்டூ குத்தி கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரபல டாட்டூ கலைஞர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |