டாணாக்காரன் இயக்குனர் தமிழ் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு தற்போது டாணாக்காரன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். தமிழ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அண்மையில் இத் திரைப்படமானது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் தமிழ் பேட்டி ஒன்றில் டாணாக்காரன் படம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் கூறியுள்ளதாவது, நான் காவல் துறையில் 12 வருடங்கள் பணியாற்றி அதன் பிறகு தான் சினிமாவுக்குள் நுழைந்தேன்.
நான் பேட்ஜில் நடந்ததை மட்டும் வைத்து படத்தை இயக்காமல் பல்வேறு பேட்ஜில் நண்பர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தான் இந்த கதையை உருவாக்கி இயக்கினேன். காவலர் பயிற்சிப் பள்ளியில் இருக்கும் பிரச்சனையை தான் படத்தில் காட்டியுள்ளேன். அது அனைத்தும் மணிமுத்தாறில் நடந்தது. நான் ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான பணிகளானது தற்போது நடந்து வருகின்றது. இயக்குவது நடிப்பது எல்லாமே காவல்துறை ஆக இருப்பதால் இனி காவல்துறை கதையே வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். விரைவில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் கூறுவதாகவும் பேசியிருந்தார்.