Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு எப்போது?….. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம் சி ஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம் இ , எம் ஆர்க் மற்றும் எம் ப்ளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் நடக்க உள்ளன.

அதனைப் போலவே எம்பிஏ படிப்பிற்கு பிப்ரவரி 26 ஆம் தேதி தேர்வு நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 044-22358289, 22358314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |