Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு தேதிகள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20ஆம் தேதியும், எம் இ, எம் ஆர்க், எம் பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி வரை www.annauniv.edu என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |