நடிகர் சூரி டான் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சூரி, பால சரவணன், காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
https://twitter.com/Dir_Cibi/status/1455511768944427016
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்நிலையில் டான் படத்தில் சூரி தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.