பிரபல இயக்குனர் விஜய் படத்தை இயக்கப் போவது தொடர்பாக ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இதன் காரணமாக அட்லி மெர்சல் மற்றும் தெறி படங்களை இயக்கும்போது நடிகர் விஜய் உடன் நெருக்கமாகும் வாய்ப்பு சிபி சக்கரவர்த்திக்கு கிடைத்தது.
இந்நிலையில் டான் படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்குனர் விஜய்யை வைத்து அடுத்ததாக படம் எடுக்க போகிறார் என்று தகவல்கள் பரவியது. ஆனால் சிபி சக்கரவர்த்தி தான் அடுத்த படத்தின் கதையை எழுதி வருவதாகவும் அந்த படத்தின் கதை நிறைவடைந்த பிறகே அதில் யார் நடிப்பார் என்று தெரியவரும் எனவும் கூறியுள்ளார். இதனால் தளபதி விஜய்யை வைத்து சிபி சக்கரவர்த்தி படம் இயக்கப் போவதில்லை என்பது தெரியவந்துள்ளது.