Categories
தேசிய செய்திகள்

டாப்சி, அனுராக் காஷ்யப்பின் வீட்டில் ரெய்டு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் .

நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக திட்டமிட்டு நடத்தப்படுவதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்பி திரு . ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் , மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க வருமான வரித்துறை செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி வருமான வரி சோதனை மூலம் மிரட்டுவதாக வும் குறிப்பிட்டுள்ளார் .

Categories

Tech |