மாருதி சுசுகியின் கார்கள் விற்பனை அடிப்படையில் முதலிடம் பெற்று அசதியுள்ளது .
கடந்த 2019 டிசம்பர் மாத விற்பனை அடிப்படையிலான கணக்கெடுப்பி ல் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள் இடம் பெற்றுள்ளது.இதில் மாருதியின் பலேனோ கார் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புள்ளிவிவரங்கள் குறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளதை பார்ப்போம்.
முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பலனோ கார் 11,135-ஆக விற்பனை செய்த்திருக்கிறது. தற்போது 2019 டிசம்பர் மாதத்தில் 18465 ஆக உயர்நதுள்ளது. இதனால் டாப் 10 கார்கள் பட்டியலில் பலேனோ கார் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மாருதி ஆல்டோவின் விற்பனை 25,121-ல் இருந்து 15,489 கார்களாக குறைந்து 38 சதவீதமாக உள்ளது . மேலும் இது டாப் 10 கார் வரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. மாருதி செடன் மாடலான டிசையர் கார் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது இந்த கார் முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் விற்பனையில் 16,797 கார்களாக இருந்தது தற்போது விற்பனையில் 15,286-ஆக குறைந்து இருக்கிறது.
மாருதி ஸ்விஃப்ட் விற்பனையில் 14,749-ஆக உயர்ந்துள்ளது . முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 11,790-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு போலவே தற்போதும் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 7-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த கார் விற்பனை 9,667-ல் இருந்து 13,658-ஆக உயர்ந்துள்ளது.
ஆறாவது இடத்தில் இருக்கிற மாருதி வேகன் ஆர் காரின் விற்பனை 10,781-ஆக இருக்கிறது . டாப் 10 பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வென்யூ காரின் விற்பனை 9,521-ஆகும் . எட்டாவது இடத்தில் உள்ள மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ காரின் விற்பனை 8394-ஆக இருக்கிறது.
முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 11,940-ஆக இருந்தத எலைட் ஐ20 காரின் விற்பனை தற்போது 7,720-ஆக குறைந்து 9-வது இடத்திற்கு சென்றுள்ளது.10-வது இடத்தில் மாருதியின் ஈகோ கார் விற்பனையில் 11 சதவீதம் குறைந்து 8,532-ல் இருந் 7,634-ஆக மாறியுள்ளது.