Categories
தேசிய செய்திகள்

டார்ச்சர் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள்… “வேலையே வேண்டாம்”… ஆட்டோ ஓட்டும் டாக்டர்… போன் போட்ட அமைச்சர்..!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரிகள் கொடுத்த தொல்லையால் வேலையை விட்டு விட்டு தற்போது ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார்.

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் பிம்ஸ் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அம்மருத்துவமனையில் தாவணகெரே மாவட்டம் பாடல் கிராமத்தை சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் என்பவர் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் டாக்டர் ரவீந்திரநாத்தை கொரோனா சிறப்பு வார்டில் தினந்தோறும் பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். அதனால் மனமுடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கட்டாய விடுப்பில் அவர் அனுப்பப்பட்டார்.

அந்த விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய அவருக்கு மறுநாளே இரண்டாவது முறையாக கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. அதனால் மனமுடைந்த அவர் தனது வேலையை உதறித் தள்ளினார். அதற்கு சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத் துறையில் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் இருக்கின்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். அதன் பின்னர் தனது வேலையை விட்டு நின்று டாக்டர் ரவீந்திரநாத், தற்போது தனது சொந்த ஊரில் ஆட்டோ ஓட்டி பிழைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த ஆட்டோவில் முன்பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கில மொழியில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தை தொல்லை கொடுத்ததாக வாசகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதனை அறிந்த கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீ ராமுலு, ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் டாக்டர் ரவீந்திரநாத்தை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் சுகாதாரத்துறை மந்திரி,” உங்கள் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

நீங்கள் என்னை நேரில் சந்தித்து உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள். மீண்டும் நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து டாக்டர் ரவீந்திரநாத், கர்நாடக சுகாதாரத் துறை மந்திரியை நேரில் சந்தித்து தனக்கு தொல்லை கொடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது புகார் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |