பிக்பாஸில் நேற்றைய எபிசோடில் அனிதா டார்ச்சர் செய்வதாக கேமராவில் புலம்பியுள்ளார் அர்ச்சனா .
பிக்பாஸ் சீசன் 4 மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் ஏதாவது ஒரு வாக்குவாதம் போட்டியாளர்களுக்கிடையே ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் சமையல் அணியில் இல்லாத அனிதா , சப்பாத்தி உருட்டி தருகிறேன் என கூறி அர்ச்சனாவிடம் வம்பிழுத்தார். இதன்பின் பொறுமை இழந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவிடம் அனிதாவின் கணவரான பிரபாவிடம் புலம்பியுள்ளார். அதில் அவர் ‘தம்பி பிரபா நான் வெளியே வந்ததும் உங்களை சந்தித்தே ஆகவேண்டும். வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே கஷ்டம் என்றால் என்ன சொல்வது .
உங்களது பொறுமையையும் சகிப்புத்தன்மையும் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. இந்த 90 நாட்கள் உங்கள் வாழ்வில் சந்தோசமான நாட்களாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும் . ஹேட்ஸ் ஆஃப் பிரபா’ என்று கூறியுள்ளார். இதையடுத்து தொடர்ந்து அனிதா டார்ச்சர் செய்ததால் கடுப்பாகிய அர்ச்சனா அனிதாவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பெட்ரூமில் படுக்க வைத்து தாலாட்டு பாடி தூங்க வைத்தார். அடிக்கடி போட்டியாளர்களுக்குள் டாஸ்க்குகளால் சண்டை நடந்தாலும் அவ்வப்போது இப்படி கேலி கிண்டல் செய்து சந்தோசமாகவும் நாட்களைக் கழித்து வருகின்றனர் .