பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பால் கேட்ச் டாஸ்க்கை போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர் . நேற்றைய எபிசோடில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்ணில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் டாஸ்கின் மூன்றாம் பகுதி நடைபெறுகிறது .
#Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/RqGgTX09J1
— Vijay Television (@vijaytelevision) December 23, 2020
அதில் பிளாஸ்மா டிவியில் வரும் பெயர் உள்ளவர்கள் உடனடியாக ஓடிச்சென்று குழாயில் இருந்து வரும் பந்தை பிடிக்க வேண்டும். இதையடுத்து பாலா, அனிதா, ஆஜித், ரியோ ,சோம், ரம்யா ஆகியோரின் பெயர்கள் மாறி மாறி வருகிறது . மேலும் பாலை பிடிக்க ஓட்டம் பிடிக்கும் போது பாலாஜி கீழே விழுகிறார் . பின் ரம்யாவிற்கு விழுந்த பாலை சோம் பிடிக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக்பாஸ்.