பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக சிவானி , கேபி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டை போட்டியாளர்கள் மிக அதிரடியாக விளையாடி வந்தனர் . நேற்று இந்த டாஸ்க் நிறைவடைந்தது .
#Day74 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/BelFWJrGQb
— Vijay Television (@vijaytelevision) December 17, 2020
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளரை ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்தனர் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் டாஸ்கில் ஈடுபாடு குறைந்த போட்டியாளர்களாக சிவானி மற்றும் கேபி தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் சிறை செல்வது குறித்து ஷிவானி ‘நாமினேசன் ஓகே ஆனால் குற்றச்சாட்டுகள் எனக்கு பிடிக்கவில்லை’ என்று கோபத்துடன் கூறுகிறார் .