சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.55.77 கோடியும், சேலத்தில் ரூ.54.12 கோடியும், திருச்சியில் ரூ.53.48 கோடியும், கோவையில் ரூ.52.29 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.