குடிப்பழக்கம் என்பது தமிழகத்தில் மேலோங்கி இருக்கின்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் கூறினாலும் யாரும் திருந்தியப்பாடு இல்லை. அதில் சிலரெல்லாம் எப்படா 12 மணி ஆகும் டாஸ்மாக் திறப்பாங்க என்று காத்து கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிலும் சிலரெல்லாம் திருட்டுத்தனமாக டாஸ்மாக்குள் ஓட்டையை போட்டு குடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது.
வடிவேலு பாணியில் விடிய விடிய குடித்துவிட்டு விடிந்தபின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பல மாவட்டங்களில் இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டம் கவுரப்பேட்டையை சேர்ந்த சதி மற்றும் முனியன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இரவு டாஸ்மாக் மூடிய பின்னர் அதில் ஓட்டை போட்டு உள்ளே நுழைவது தான் இவர்களின் வேலை. நேற்று இரவு அதே போல் தண்டலச்சேரி டாஸ்மாக்குள் நுழைந்து மது அருந்தி கொண்டிருந்தபோது போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்துள்ளார்கள்.