Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கில் கலவரம்…. இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் அடித்துக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் கிராம பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக சின்னதுரை இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மது பாட்டிலால் சின்னதுரையின் தலையில் பலமாக தாக்கி உள்ளனர்.

இதில் சின்னத்துரை ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த சின்னதுரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சின்ன துறையின் மனைவி மதுமிதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் சின்னத்துரையை தாக்கியது தருமன் உள்ளிட்ட மூன்று பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக தர்மனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |