நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மதுபான கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.